Skip to content
Home » இன்று கூட்டணி பேச்சுவார்த்தை.. 7 தான் கூற திமுக முடிவு காங்கிரஸ் அதிர்ச்சி..

இன்று கூட்டணி பேச்சுவார்த்தை.. 7 தான் கூற திமுக முடிவு காங்கிரஸ் அதிர்ச்சி..

  • by Authour

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று காங்கிரஸ் குழுவினருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதேபோல் காங்கிரசில் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் குழுவினர் இன்று காலை 12 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசிக்கின்றனர். அதன் பின்னர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.  கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு, புதுச்சேரி உட்பட 12 தொகுதிகள் இடம்பெற்ற பட்டியலுடன் காங்கிரஸ் தலைவர்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் புதுச்சேரி உட்பட 7 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் பல மாநில கட்சிகள் காங்கிரசுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் தான் என உறுதியிட்டு கூறியுள்ள நிலையில் திமுகவும் அதே பார்முலாவில் பேச்சுவார்த்தையில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *