மக்களவை தேர்தல் நெருங்குவதால் காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாநகரில் 27 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி என்.செந்தில் குமார் தஞ்சை சைபர் க்ரைமில் இருந்து திருச்சி ஏர்போர்ட் குற்றப்பிரிவுக்கும், அன்பழகன் ஒரத்தநாட்டில் இருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கும், அன்பு செல்வன் பட்டுக்கோட்டை மதுவிலக்கில் இருந்து, அரியமங்கலம் சட்டம் ஒழங்கு, கன்னிகா நாகை வாய்மேட்டில் இருந்து திருச்சி சைபர் க்ரைம், வெற்றிவேல் வெளிப்பாளையத்தில் இருந்து உறையூர் சட்டம் ஒழுங்கு, அழகம்மாள் பெரம்பலூர் குற்றப்பதிவேடுகளில் இருந்து கோட்டை குற்றப்பிரிவு, மணிவண்ணன் பாடாலூரில் இருந்து ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு, பெரியசாமி திருவாரூரில் இருந்து பாலக்கரை சட்டம் ஒழுங்கு, ராஜ கணேஷ் காத்திருப்போர் பட்டியலில் இருந்து செசன்ஸ் கோர்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் முனியாண்டி பெருகவாழ்ந்தானில் இருந்து உறையூர் குற்றப்பிரிவு, பரமானந்தம் நாகையில் இருந்து திருச்சி நில அபகரிப்பு பிரிவு, கவிதா புதுகை சைபர் க்ரைமில் இருந்து, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையம், வினோதினி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அரியமங்கலம் குற்றப்பிரிவு, விஜயலட்சமி மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு, சுப்புலட்சுமி அரும்பாவூரில் இருந்து திருச்சி மது விலக்கு பிரிவு, நளினி பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், தனபாலன் உடையார் பாளையத்தில் இருந்து மாநகர குற்றப்பிரிவு 2, பாலசுப்பிரமணியன் செந்துறையில் இருந்து, பொன்மலை குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி உள்ளனர்.
ராஜ்குமார் தோகமலையில் இருந்து ஏர்போர்ட் சட்டம், ஒழுங்கு, விதுல் குமார் சமயபுரத்தில் இருந்து தில்லை நகர் சட்டம் ஒழுங்கு, ரவிசந்திரன் புதுக்கோட்டை பனையப்பட்டியில் இருந்து காந்தி மார்க்கெட் சட்டம் ஒழுங்கு, அம்சவேணி கரூர் சைபர் க்ரைமில் இருந்து கே.கே.நகர் குற்றப்பிரிவு, திருவானந்தம் அரியமங்கலம் சட்டம் ஒழுங்கில் இருந்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு, பெரியசாமி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் இருந்து, மாநகர குற்றப்பிரிவு 1, காந்திமதி பொன்னமராவதி போக்குவரத்தில் இருந்து மாநகர ஆயுதப்படை, மதுமதி பெரம்பலூர் டவுன் போக்குவரத்தில் இருந்து ஆயுதப்படை எம்டி, கார்த்திகேயன் அரியலூர் போக்குவரத்தில் இருந்து கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பிறப்பித்துள்ளார்.