திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கையில் கூறியதாவது… பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் செல்லும் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.. இன்று சனிக்கிழமை, இரவு 8.00 மணிக்கு (நேரம் மாறுதலுக்கு உட்பட்டது) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பிளாசம்ஸ் ஹோட்டலுக்கு வருகை தர உள்ளார். அது சமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தை சார்ந்த கழகத்தின் அனைத்து நிலைகள் உள்ள நிர்வாகிகளும் வருகை தந்து கழக பொதுச்செயலாளர் அண்ணன் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்திட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.