திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.