நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி முச்சந்தியில் மதி ரத்த பரிசோதனை நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் டொனேஷன் கேட்பது போல் வந்து டேபிள் மேல் இருந்த லேப் டெக்னீசியனின் செல்போனை தான் கொண்டு வந்திருந்த பேப்பர் பைலை வைத்து நூதனமாக எடுத்துச் சென்றுள்ளார் அங்கு வந்து பார்த்த லேப் டெக்னீசியன் தான் செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது டொனேஷன் கேட்டு வந்த நபர் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைமில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் பட்டப் பகலில் டொனேஷன் கேட்பது போல் வந்து செல்போனை திருடி சென்ற சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.