Skip to content
Home » கவர்னருக்கு எதிராக நாளை கருப்பு கொடி காட்டுவோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..

கவர்னருக்கு எதிராக நாளை கருப்பு கொடி காட்டுவோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..

 

 

தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவி நாளை நாகை மாவட்டத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைப்பெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். அதன் ஒருபகுதியாக 1968 கீழ்வெண்மணி படுகொலையின் போது குண்டு அடிப்பட்டு உயிர் பிழைத்த தியாகி ஜி.பழனிவேலை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் ஆளூநர் தன்னை வந்து சந்திப்பது தனக்கு விருப்பம் இல்லை என தியாகி பழனிவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் வர்க்க போராட்டத்தில் நில சுவான்தாரர்களுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன், அந்த போராட்டத்தின் போது ஆதிக்க சக்திகளால் குண்ட்டிப்பட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன். அப்போதல்லாம் வந்து சந்திக்காதவர்கள் தற்போது அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களை பிஜபி கட்சிக்கு இழுப்பதற்காகவும் ஆளூநர் தன்னை வந்து சந்திக்க உள்ளதாக தெரிவித்த அவர் ஆளூநர் தன்னை வந்து சந்திப்பது தனக்கு விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ, வுமான வி.மாரிமுத்து தெரிவித்த போது,

நாளைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாகை மாவட்டம் வருகைத்தரும் தமிழக ஆளுநருக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகமாக இருக்கும் கீழ்வேளூர் பகுதியில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான பழனிவேலை சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் ரவி செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர் ,நாகை மாவட்டத்திற்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்டுவதுடன் அங்ககுள்ள வீடுகள், பனைமரங்கள், சாலையோரங்களில் கருப்புக்கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *