கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் தாய்,தந்தை இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்ற நிலையில்,வீட்டில் தனியாக இருந்த போது நோட்டமிட்ட 3 மர்ம நபர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளைக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு வீடு கட்டுவதற்காக நாங்கள் இங்கு இன்ஜினியரை பார்க்க வந்துள்ளதாக கூறியுள்ளனர்,தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டு கதவை தட்டியதும் திறந்த உடன் வீட்டிற்கு உள்ளே வந்து கதவை தாள் செய்து கத்தியை காட்டி மிரட்டினர் என்றும் கையுறை மாஸ்க் அணிந்த வகையில் வந்த நபர்கள் பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டி உள்ளனர்,மிரட்டலுக்கு பயந்த சிவஞானம் வீட்டில் வைத்திருந்த 40 லட்ச ரூபாய் பணம், நான்கரை சவரன் தங்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.
இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 மாத காலங்களாக பல்வேறு வீடுகளில் நகை, பணம், இருசக்கர வாகனம் என பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை அப்பகுதியைச் சேர்ந்த போலீசார் குற்ற சம்பவங்களை மூடி மறைப்பதில் மும்மரமாக உள்ளனர்.