கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனப்பணியாளர்கள் சிறுமுகை வனச்சரகம் ஓடந்துறை சுற்று உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வனப்பகுதிஅருகே 200 மீட்டர் தொலைவில் லிங்காபுரம் அருகில் உள்ள முருகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் பெண் காட்டு யானை ஒன்று எழுந்து கொள்ள முடியாத வகையில் படுத்த நிலையில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.. உடனே இதுகுறித்து வனச்சரக அலுவலர் மனோஜ் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனே மருத்துவ குழுவினர் படுத்திருக்கும் பெண் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை அளித்தனர். மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் படுத்து இருக்கும் பெண் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஆனால் யானையால் எழுந்து நிற்க முடியாமல் தவித்தது.இதனையடுத்து வனச்சரக அலுவலர் மேற்பார்வையில் தொடர் கண்காணிப்பில் யானையினை மீட்கும் பணியில் வனப்பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்..தொடர் சிகிச்சையாக வலி நிவாரணி, விட்டமின் சத்து மருந்துகள், குளுக்கோஸ் போன்றவை ஊசி மூலமாக செலுத்தப்பட்டு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் யானைக்கு பழங்கள் மூலமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 4.10 PM மணியளவில் யானை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.உடற்கூறாய்வு நாளை (27.01.2024) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை வனத்துறையினர் தெரிவித்தனர்.
