75 வது குடியரசு தின விழா முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைவர் பிரேமலதா மற்றும் அரசு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் மட்டும் கலந்து கொண்டு, பொதுமக்கள் இல்லாமலேயே நடைபெற்ற கிராம சபை கூட்டம். அந்த கிராம சபை கூட்டத்தில் குளித்தலை கோட்டாட்சியர் ரவி கலந்து கொண்டார். பொதுமக்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என அவரும்
கேட்காமல் பொதுமக்களே கலந்து கொள்ளாத கிராம சபை கூட்டத்தில் அவரும் சம்பிரதாயத்திற்கு (பார்மால்டி) கலந்து கொண்டுள்ளார்.
அரசின் உத்தரவுகளை மதிக்காமல் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
இதேபோல், சிந்தலவாடி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தலைவர், செயலாளர் ஒரு தலைப்பட்சமாக ஒரே இடத்தில் பெயரளவிற்கு கூட்டத்தை நடத்தி வருவதாக கோரி புனவாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள், கூட்டத்தின் விதிமுறைகள் தெரியுமா, மனு கொடுத்தால் தீர்மானம் ஏற்றுக்கொவதில்லை.
பத்தாயிரம் பேர் கொண்ட ஊராட்சியில் 100 நாட்கள் வேலை ஆட்களை 100 பேரை வைத்து கொண்டு ஒரே ஊரிலே நீங்கள் தொடர்ந்து கூட்டத்தை நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், மற்றும் தீர்மானம் வாசித்த ஊராட்சி செயலர் ஆகியோர் இளைஞர்களிடம் இங்கெல்லாம் வந்து நீங்க பேசகூடாது தெரிவித்தனர்.
இதனால் இருவர்களிடமும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கிராம சபை கூட்டம் கூச்சல் குழப்பமாக காணப்பட்டது. அந்த நேரத்தில் கிராமசபை கூட்டம் முடிந்து விட்டது. ஓரமாக நின்று கொண்டு தீர்மானம் நிறைவேறியது என கையெழுத்து வாங்கி விட்டு சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு லாலாபேட்டை போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பரபரப்பு ஏற்பட்டது.