இளையராஜாவின் மகள் பவதாரணி(47) புற்றுநோய்க்காக இலங்கை தலைநகர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். பவதாரணியின் உடலை சகோதரர் யுவன் சங்கர் ராஜா, மற்றும் டைரக்டர் வெங்கட் பிரபு ஆகியோர் விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வந்தனர். விமானம் சரியாக 3. 30 மணி அளவில் வந்தது. விமான நிலைய நடைமுறைகளை முடித்து பவதாரணி உடல் சென்னை தி. நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் கோம்பை அடுத்த பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
கொழும்பு சென்றிருந்த இளையராஜா நேராக மதுரை சென்று அங்கிருந்து பண்ணைபுரம் செல்ல உள்ளார்.