Skip to content
Home » திருச்சியில் துரை வைகோ போட்டியா? வைகோ பேட்டி

திருச்சியில் துரை வைகோ போட்டியா? வைகோ பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  திருச்சி சிறுகனூரில் இன்று  மாலை வெல்லும்  ஜனசாயகம் என்ற தலைப்பில் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில் வைகோ அளித்த பேட்டி :

இந்திய நாட்டின் அரசியலில் நெருக்கடி காலத்துக்கு பின்னர் மாபெரும் மாற்றமும் திருப்பம் ஏற்படக்கூடிய சூழலில் நாடாளுமன்றத் தேர்தலை இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியா சந்திக்க போகிறது. பண பலத்தாலும், அதிகார பலத்தாலும், தவறான பிரச்சாரத்தின், பலத்தாலும்  கோவிலை காட்டி மக்களை மயக்கி விடலாம் என்கின்ற அந்த உணர்வோடும் இங்கே நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் வரவேண்டும் என பாஜக  முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் .தமிழகம் பாண்டிச்சேரி சேர்த்து 40தொகுதிகளும் வெற்றி பெறுவதோடு மற்ற மாநிலங்களிலும் அப்படி வெற்றி பெறுகிற போது நிச்சயமாக பிஜேபி அல்லாத ஒரு அரசு அமையும், அது கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுகின்ற அரசாக இருக்கும்.

இந்தியா கூட்டணியில் 30கட்சிகள்  இருக்கிறது. எனவே  சின்ன சின்ன பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும் அது சரியா போய்விடும். திருச்சியில்  துரைவைகோ போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று  கேட்டபோது, எனக்கு தெரியாது என வைகோ கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *