கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. முன்னதாக குடியரசு தின விழாவினை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி கொடியேற்றினார். பின்னர் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது. பின்னர் வினோபா அறக்கட்டளை செல்லமுத்து சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்களை இருசக்கர வாகன மூலம் அழைத்து வரும் பெற்றோர்கள் முன்னிலையில் 50 மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் வினோபா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.