அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 52 பயணாளிகளுக்கு 1 கோடியே 38 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சிறப்பாக பணியாற்றிய 35 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தை வழங்கி பாராட்டினார்
விழாவின் ஒரு பகுதியாக பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து காவல்துநாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்,காவல்துறை தீயணைப்பு துறை, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்ட ஆட்சியர், இந்நிகழ்ச்சியில் 32 பயனாளிகளுக்கு சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின்
கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏளானனோர் கலந்து கொண்டு கண்டுக்களித்தனர்.நிகழ்ச்சிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்