கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், பொங்கல் திருவிழாவின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக் கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி, புத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடக்கவிருக்கிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் முன்னெடுப்பில் முன்னர் நடைபெற்ற சென்னை சங்கமம், இந்த
ஆண்டும் அவரே பொறுப்பேற்று நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், உணவுகள் என பெரியதொரு திருவிழாவாக நடத்திட அரசின் ஏற்பாடுகள் மும்மரமாக நடந்துவரும் நிலையில், இந்த நிகழ்வை விளம்பரப்படுத்தும் விதமாகக் கோவளம் கடற்கரையில் கனிமொழியின் ஆதரவாளர் ஒருவர், ஆழ்கடலில் சென்னை சங்கமம் – 2023 பதாகையைப் பிடித்தவாறு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.