திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ் மொழிக்காக
தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. இவர்களது நினைவிடங்களில்அதிமுக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் இப்ராஹிம்சா, அமைப்பு செயலாளர்கள், மனோகரன், ரத்தினவேல், வளர்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.