அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு சிறுமியை கடத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது என இரண்டிற்கும் சேர்த்து 17 வருட சிறை தண்டனையும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.