அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மீரா மகளிர் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகம் சார்ந்த மாணவிகள் நடத்திய இவ்விழாவை செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமையேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் மேஜர் முனைவர் விஜி முன்னிலை வகித்து பேசிய போது மாணவிகள் தங்கள் எதிர்காலத்துக்கு ஏற்றவாறு தங்களின் முன்னெடுப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பல்வேறு தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நடுவரான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பிரகாஷ் சிறப்பு விருதினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மேலாண்மை
சார்ந்த பல்வேறு விளையாட்டுகளில் மாணவிகளை பங்கு பெற செய்து கருத்துக்களை விளக்கினார்.
நிறுவனத்தில் செலவுகளை திறமையாக கையாண்டு கட்டுப்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பரீதியாகவும் பல்நோக்கு சிந்தனையுடனும் விளக்கும் வகையில் வழிமுறைகள் குறித்து பல்வேறு யுக்திகளை உதாரணங்கள் மூலம் விளக்கி மாணவிகளிடையே உரையாற்றினார். கருத்தரங்கில் 15 ககும் மேற்றபட்ட கல்லூரிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் சங்கீதா வரவேற்றார், இறுதியில் பேராசிரியர் உஷாராணி நன்றி கூறினார். இந்நிகழ்சிகளுக்கான ஏற்பாகளை பேராசிரியர்கள் தவச்செல்வி மற்றும் வெண்ணிலா தலைமையில் மாணவிகள் செய்திருந்தனர்.