இந்தாண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 2வது வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஆளுநர் உரையுடன் தொடங்கிய 5-வது த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநரால் முடித்து வைக்கப்படவில்லை. எனவே, ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத் தொடரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சட்டப்பேரவையின் 5-வது கூட்டத் தொடரை முடித்து வைப்பதற்கு அனுமதி கோரும் கோப்பினை தமிழக சட்டப்பேரவை செயலகம் சமீபத்தில் ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. ஆளுநரும் நேற்று கூட்டத்தொடரை முடித்து வைக்க அனுமதியளித்துள்ளார். இதையடுத்து, ‘கடந்தாண்டு ஜன.9-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை, ஆளுநர் முடித்து வைத்துள்ளார்’ என சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அடுத்த மாதம் தொடங்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.