மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு முதல்வர் மம்தா காரில் பயணித்தப்போது கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், முதல்வர் மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முதல்வர் மம்தா முடிவு செய்திருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் முதலவர் பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.