திருச்சி பொன்மலையை யொட்டியுள்ள மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருநகர் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில்வே ஜங்ஷன், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்றால் பொன்மலை ரயில்வே குடியிருப்பு மற்றும் பொன்மலை ஒர்க் ஷாப்பை தாண்டி தான் வர வேண்டும். பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த அந்த பாதைகளை அடைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றியும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மேல கல்கண்டார் கோட்டை செல்லும் 4 வழித்தடங்களின் பாதைகளை திடீரென ரயில்வே நிர்வாகம் மூடியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் பிரச்சனை செய்ய வழிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பொன்மலையையொட்டியுள்ள ஊர்களில் வசித்து வரும் 1 லட்சம் குடும்பங்களை கருத்தில் கொண்டும் அந்த ஊர்களில் வசித்து வரும் ரயில்வே தொழிலாளர்களை கவனித்தில் கொண்டும் சப்வே அமைத்துக்கொடுக்க வேண்டும் என நேற்று அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் டிஆர்எம் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொதுமக்கள் மனு அளிக்கும் போது திமுக தரப்பில் உள்ள 4 கவுன்சிலர்கள் வரவில்லை. அதேபோல் முக்கிய திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ளவில்லை… இது குறித்து தகவல் தெரிவித்தும் திமுகவினர் கலந்து கொள்ளாதது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது..