குடியரசு தின விழாவையொட்டி அன்றைய தினம் மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். கவர்னர் ரவி பதவியேற்றதில் இருந்து அவர் தமிழகத்துக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை வெளியிடுவதால் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சிகளை பெரும்பாலான தலைவர்கள் புறக்கணித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டும் தேநீர் விருந்து நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த தேநீர் விருந்தில் திமுக, மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.