பிரதமர் மோடி 20ம் தேதி திருச்சி ஶ்ரீரங்கம்ரெங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அங்கு அனைத்து சந்நிதிகளிலும் பிரதமர் தரிசனம் செய்தார். கோயிலில் இருந்த புறப்பட்டபோது பிரதமர் மோடியிடம் ஶ்ரீரங்கம் கோவில் பட்டா்கள் சார்பில் அயோத்தியில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோயிலுக்கான வஸ்திரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த வஸ்திரங்களை அயோத்தி கொண்டு சென்ற பிரதமர் மோடி அங்கு நடந்த விழாவில் அங்குள்ள கோயில் பட்டர்களிடம் ஶ்ரீரங்கம் கோவில் பட்டர்கள் சார்பில் அவை அளிக்கப்பட்டதாக கூறி ஒப்படைத்தார்.