திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வரும் 25ம் தேதி காலை 10 மணிக்க வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி கோர்ட் MGR சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.
அதனை தொடர்ந்து அன்று இரவு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பொன்மலை திருவிக திடல், பஞ்சாயத்து போர்டு அருகில், மேல கல்கண்டார்கோட்டை யில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான கரூர் M.சின்னசாமி சிறப்புரையாற்றுகிறார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கூட்டத்துக்க தாங்குகிறார். தலைமை கழக பேச்சாளர் புதுகை M.செல்லம் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட, வார்டு, சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.