அரியலூர் மாவட்டம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய மோடி அரசின் ஓட்டுநர்களின் மோட்டார் வாகன சட்டத்தை குற்றவியல் சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க கேட்டு அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு சங்கத் தலைவர் சந்தானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.சங்கர், வி. ராம்குமார், ஆர்.வினோத் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம், மாவட்ட தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் துரைசாமி கண்டன உரையாற்றினார். ஆட்டோ ராமசாமி, அருண் பாண்டியன், முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
