மழை வெள்ள பேரிடர் பாதிப்புகள் காரணமாக நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை அடுத்த நாகூர் கிரசண்ட் பள்ளியில் இன்று நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் எல்.கே.ஜி குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் காவலர், திருவள்ளுவர், விமான
பணிப்பெண், தேவதை, ராணுவ வீரர் உள்ளிட்டவர்களின் வேடங்களை அணிந்தவாரு குழந்தைகள் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். இதுபோக மழையின் தேவை, நீரின் அவசியம், இரத்தத்தின் முக்கியத்துவம் குறித்து வேடங்கள் அணிந்த குழந்தைகள் மழழை குரலில் அவைகளின் விளக்கங்களை அளித்தனர். திராட்சை, கேரட், மரம், வண்ணத்து பூச்சு, ஸ்பைடர் மேன் உள்ளிட்ட குழந்தைகளின் வேடங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.