நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கலாம். தமிழகத்தில் எந்த தேதியில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த முறை ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.