உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ஞானமூர்த்தி திருச்சி கோட்ட
தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திண்டுக்கல் முதல் விழுப்புரம்(16868 & 16867) வரை சென்று வரும் பேசஞ்சர் இரயிலை ஈச்சங்காடு ஹால்டு, ஈச்சங்காடு (2) இரயில் நிலையங்களில் நிருத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்மனுவில், அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் ஈச்சங்காடு ஹால்டு, ஈச்சங்காடு இரண்டு இரயில் நிலையத்தில் தினமும் காலை 9.30 மணிக்கு சென்று மாலை 5.30 க்கு வரும் பாசங்சர் இரயில் (16868&16867) கொரோனா காலம் வரை நின்று சென்றது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்த இரயில் நிற்பதில்லை. இந்த இரண்டு இரயில் நிலையங்களுக்கு அருகில் ராம்கோ, இந்தியா சிமெண்மெட்ஸ் கம்பனிகள் உள்ளன. இதில் பணிபுரியும் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் இந்த இரயில் நிற்காததால் 10 கி. மீ. தூரத்தில் உள்ள பெண்ணாடம் மற்றும் ஆர். எஸ். மாத்தூர் சென்று இரயிலில் பயணம் செய்கின்றனர். மேலும் இந்தப் பகுதியில் சுமார் 25 கிராமத்திற்கு மேற்பட்ட பொது மக்களும், பள்ளிக் கல்லூரி மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே திண்டுக்கல்-விழுப்புரம் பேசஞ்சர் இரயிலை ஈச்சங்காடு ஹால்டு, ஈச்சங்காடு இரயில் நிலையத்தில் நிருத்த உத்தரவிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.