காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் தற்போது அசாம் மாநிலத்தில் நடந்து வருகிறது. அசாமில் இந்த பயணத்திற்கு பாஜக மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று யாத்திரை அசாம் தலைநகர் குவகாத்தியில் நடந்து வருகிறது. அங்கு அவர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அசாம் அரசு அனுமதி மறுத்தது. ராகுல் காந்தியின் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொண்டர்கள் முன்னேறியதால் ராகுல் கண் முன்னே போலீசார் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் யாத்திரையில் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் இந்த சம்பவத்திற்கு அசாம் முதல்வரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் காரணம், தாங்கள் கேட்க விரும்புவதை கேட்க மாணவர்கள் அனுமதிக்கப்டுவதில்லை. இது தான் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார்.