தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், பிரபல தொழில் நிறுவனங்களை பார்வையிடவும் இந்த சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற்கொள்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் பயணிக்கிறார்கள். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் பிப்ரவரி 12ம் தேதி சென்னை திரும்புகிறார். அடுத்த சில தினங்களில் சட்டமன்ற பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.