சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது. கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் 7.2ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தை எட்டியது. 7.01 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், சீனாவின் சின்ஜியாங் பகுதியில், குறிப்பாக அக்சு நகருக்கு மேற்கே 140 கிலோமீட்டர் தொலைவில் 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து டில்லி, சுமார் 1,400 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது. இந்த நிலநடுக்கத்தில் நூற்றுகணக்கானோர் பலியானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.