Skip to content
Home » அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல்….

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 ஆம் தேதி வெளியிடப்பட்டதில், மாவட்டத்தில் 2,53,534 ஆண் வாக்காளர்களும், 2,53,880 பெண் வாக்காளர்களும், 11-இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,07,425 வாக்காளர்களும் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2024-ஐ தகுதி நாளாக கொண்டு கடந்த 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத்திருத்தம், 01.01.2024-ன் போது தகுதி நாளாக கொண்டு, 18-வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திடவும் படிவங்கள் பெறப்பட்டன.

சிறப்பு சுருக்கத் திருத்தம் – 2024 ன் போது 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி படிவம் 6-ல் வரப்பெற்ற 4,975 விண்ணப்பங்களில் 4,943 விண்ணப்பங்கள் ஏற்பும், 32-விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்ககோரி படிவம்

6A-ல் விண்ணப்பங்கள் ஏதும் வரப்பெறவில்லை. படிவம் 7-ல் வரப்பெற்ற 1,003 விண்ணப்பங்களில், 995விண்ணப்பங்கள் ஏற்பும், 08 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8-ல் 2,240 விண்ணப்பங்களில், 2,189 விண்ணப்பங்கள் ஏற்பும், 51 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்ககோரி படிவம் 6-ல் வரப்பெற்ற 5,761 விண்ணப்பங்களில் 5,710 விண்ணப்பங்கள் ஏற்பும், 51-விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்ககோரி படிவம் 6A-ல் விண்ணப்பங்கள் ஏதும் வரப்பெறவில்லை. படிவம் 7-ல் வரப்பெற்ற 1,068 விண்ணப்பங்களில், 1,050 விண்ணப்பங்கள் ஏற்பும், 18 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8-ல் 1,964 விண்ணப்பங்களில், 1,905 விண்ணப்பங்கள் ஏற்பும்,59 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024 தொடர்பாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 இன்று வெளியிடப்பட்டதன் அடிப்படையில், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,251 ஆண் வாக்காளர்களும், 1,29,518 பெண் வாக்காளர்களும், 05 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,58,774 வாக்காளர்கள் உள்ளனர். 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,28,082 ஆண் வாக்காளர்களும், 1,29,169 பெண் வாக்காளர்களும், 08 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,57,259 வாக்காளர்கள் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் 2,57,333 ஆண் வாக்காளர்களும், 2,58,687 பெண் வாக்காளர்களும், 13-இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,16,033 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), தனி வட்டாட்சியர் தேர்தல் திரு.வேல்முருகன், வட்டாட்சியர் அரியலூர் ஆனந்தவேல், வட்டாட்சியர் ஜெயங்கொண்டம் கலிலூர் ரகுமான், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!