நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதிமுக சார்பில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு மற்றும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.
1. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர். 2. மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர் 3. ஆவடி ரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர் 4. வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்.
மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது. 1. தி.மு.ராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர் 2. ஆ.வந்தியத்தேவன் -கழக கொள்கை விளக்க அணி செயலாளர் 3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர் 4. ப.த.ஆசைத்தம்பி – கழக இளைஞரணி செயலாளர் .
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.