Skip to content
Home » விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நேற்று ஜனவரி (19) சென்னை காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில், விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், “விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்தவர். எங்களை மாதிரி’ இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர். தமிழ்நாடு ஒரு தலைவனை மிஸ் பண்ணிடுச்சி. நடிகர் சங்கத்தை மீட்டு ஒரு குடும்பமாக கொண்டுவந்தார்.

இவர் செய்த சாதனைகளை இந்தியாவில் யாரும் செய்ததில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிப்பது என் கடமை, அவரது படத்தில் நடிக்க தயார் என நடிகர் விஷால் ஓபனாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *