பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து கடந்த வருடம் வெளியேறினார். இந்த நிலையில் இன்று காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி அவருக்கு கட்சி உறுப்பினர் சீட்டை வழங்கினார்.