பிரதமர் மோடி நாளை ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகிறார். தனி விமானத்தில் திருச்சி வரும் பிரதமர் அங்கிருந்து ஶ்ரீரங்கத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்காக ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிபேடில் இருந்து ரெங்கநாதர் கோயிலுக்கு காரில் வருகிறார். இதற்காக பிரதமர் மோடி வரும் வழியில்
புதிய தார் சாலை அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இன்று காலையிலும் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் ஶ்ரீரங்கம் சாலைகள் பளிச்சிடுகின்றன.