Skip to content
Home » திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என  தெரிகிறது. இந்த நிலையில்  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்  திமுகவும் இன்று தேர்தல் பணிக்குழுவை அறிவித்து உள்ளது.  அமைச்சர்  கே. என். நேரு தலைமையில்  தேர்தல் ஒருங்கிணைப்பு மற்றும்  மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில்  உறுப்பினர்களாக ஆ. ராசா,  பொன்முடி, ஆர். எஸ். பாரதி,  தங்கம் தென்னரசு , எ. வ. வேலு, உதயநிதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.K. N. Nehru,அரசியலில் யாரும் யோக்கியன் இல்லை... அமைச்சர் கே.என்.நேரு பேச்சால் பரபரப்பு! - dmk minister kn nehru says no one clean chit in politics - Samayam Tamil

இளைஞர் அணித் தலைவரை பார்த்து இந்திய மாநிலங்கள் அஞ்சுகின்றன” - டி.ஆர். பாலு | nakkheeran

‘ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த  டி. ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் நேரு , பொன்முடி, ஐ. பெரியசாமி, ஆ. ராசா,   திருச்சி சிவா , எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு  குழு கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் டிகேஎஸ் இளங்கோவன், மேயர் பிரியா, அமைச்சர் பி. டி. ஆர் தியாகராஜன்,  ஏழிலன் நாகநாதன்,   டிஆர் பி.ராஜா,  , கோவி செழியன்,   எழிலரசன், ராஜேஸ்குமார் எம்.பி.  ஏ. கே. எஸ். விஜயன், அப்துல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!