திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டடு கிராமத்தில் அடைக்கல அன்னை,அரவாயி கோயில் பக்தர்கள் சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 850 காளைகளும் 400 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ்
பெர்னாண்டஸ்,ஊராட்சி ஒன்றிய தலைவர் மாத்தூர் கருப்பையா, மற்றும் ஊர் மணியார்கள், பட்டயதாரர்கள் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டிக்கு முன்பதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை மதுரை மாவட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் வந்துள்ளன.
மாடுபுடி வீரர்களுக்கும், சிறந்த மாடுகளுக்கும் கிரைண்டர், அரிசி பை, சைக்கிள், கட்டில், மெத்தை, சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. அப்பகுதியை சேர்ந்த சுற்றுவட்ட ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு வருகின்றனர்.