திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்தவர் நவீன் சந்துரு வயது (33). இவரது தந்தை நடராஜன் (62).
நடராஜன் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த நடராஜன் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நடராஜன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் உறவினர் வீடு என எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் அவரது மகன் நவீன் சந்துரு திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து நடராஜனை தேடி வருகின்றனர்.