Skip to content
Home » ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…

ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் மரத்தில் கலை வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பல்வேறு வேலைப்பாடுகள் நிறைந்த மரத்தாலான கலைப்பொருட்களைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, கோயில் கதவுகள், கோயிலுக்குத் தேவையான மரத்தாலான பல்வேறு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பெயர்பெற்ற கோயில் சிற்பக் கதவுகள் மற்றும் தேர்களை இவர்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதவுகள் செய்யும் பணி
கதவுகள் செய்யும் பணி

இந்நிலையில், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கான கதவுகளைச் செய்யும் பணி, ரமேஷின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ரமேஷ் மற்றும் 50 பேர் கொண்ட குழுவினர் அயோத்தி சென்று, கதவுகளை வடிவமைக்கும் பணிகளைச் செய்து முடித்துள்ளனர். கோயிலின் நுழைவுப் பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டபம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை சன்னிதிகள், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகளை இவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.

ராமர் கோயில் கதவுகள்

ரமேஷ், மரச்சிற்ப வடிவமைப்பாளர்

இவற்றைத் தவிர, பிரதான வாயிலுக்கு, 8 அடி உயரத்தில் 12 அடி அகல அளவில் மயில் சிற்பங்கள் அலங்காரத்துடன் நான்கு மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் மேல் தளத்திற்குச் செல்லும் படிகள் உள்ளிட்டவையும் வியக்கத்தக்க வகையில் தயாராகியுள்ளன. மரத்தாலான இந்தக் கதவுகளுக்கு மேல்புரத்தில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கதவுகளை தயாரிப்பதற்கான தேக்கு மரங்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளிலிருந்து கொண்டு வந்தார்களாம். இந்த அறிய வகை தேக்கு பல நூறு ஆண்டுகள் வலைமையுடன் நிற்கக் கூடியது. கதவுகள் மட்டுமல்லாது பிரதிஷ்டைக்காக ராமர் விக்ரகம் கொண்டு செல்லப்பட்ட பல்லக்கு ஒன்றையும் இந்த குழுவினர் வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *