Skip to content
Home » இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. திரையரங்க வாயில்களில் கட்டவுட்டுகளும் பேனர்களும் நிரம்பி வருகின்றன. துணிவு படம் குறித்து அப்படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் டைரக்டர் ஹெச் வினோத் ஆகியோர் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வந்தனர். மக்களின் மீது வங்கிகள் நடத்தும் சர்வாதிகார போக்கை சொல்லும் விதத்தில் துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். துணிவு திரைப்படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்தான் என கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துணிவு படத்தில் பன் பண்ணியுள்ளார் அஜித் என ரசிகர்கள் கூறி உள்ளனர்

அஜித்தின் ஓப்பன் பெர்பாமென்ஸ் படத்தை ரசிக்க வைக்கிறது. மைக்கல் ஜாக்சன் டான்ஸ், அடிதடி சேஸிங், என மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பட்டாசு வெடிக்கிறார் ஏ.கே வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணிவு படத்தின் ஒன்லைன். மங்காத்தாவிற்குப் பிறகு மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தைப் பார்க்க முடிந்தது. ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத். முதல் பகுதியில் அஜீத் ஆரவார எனர்ஜி ஆட்டம். செம்ம ஸ்பீடு.இரண்டாம் பாதியில் வினோத் டச். நல்ல மெசேஜ். பேமிலி ஆடியன்ஸ்க்கும் கனெக்ட் ஆகும். துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனத்தை பெற்றுள்ளன. குறிப்பாக துணிவு படத்தில் “ரவி”ந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத” என அஜித் பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *