சென்னை எம்ஜிஆர் மாளிகையில் நிரபர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துக்களை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காட்டியவர் எம்ஜிஆர். அண்ணாவின் கொள்கை, லட்சியங்களை பின்பற்றி திரைப்படங்களில் கழகத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்து அதிமுக வெற்றியடைய செயல்பட்டவர் எம்ஜிஆர். ஆகவே எம்ஜிஆர் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT). புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்ததே திமுக என்ற தீய சக்தியில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்று தான்.
அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வர் ஆவது என்பது இலவுகாத்தகிளி கதை போன்றுதான். தமிழகத்தில் இரட்டை இலை துளிர்விட்டு வளர்ந்திருக்கும் போது தாமரை மலர்வது நடக்காது. அரசியலில் ஓடாத காளைகள் அதிகமாக உள்ளன. ஓடாத காளைகளுடன் நாங்கள் மோதுவதில்லை. தமிழர்களின் அடையாளத்தை யாராலும் மாற்ற முடியாது. தமிழர்கள் வீரமும், காதலும் இல்லாதவர்கள் அல்ல. 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்” என்றார்.