மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரிழந்தூர் கிராமத்தில் கவிசக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரில் அவரது பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும். தமிழ் கம்பனும் என்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:
பாரத நாடு முழுவதும் ராமரை கொண்டாடுகிறது.
பழமை வாய்ந்த தமிழ் இலக்கியலான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது.தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது.
அரசியல் அமைப்பே ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியமானது. சாதாரண மனிதரும் ராமரை தெரிந்து கொள்ளும் வகையில் கம்பராமாயணத்தை முதலில் தமிழில் அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால்தான் பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது. பாரதம் என்பது ஒரே குடும்பம் இங்கு பல்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பாரதத்தின் உயிர் ஸ்ரீராமர்.
இவ்வாறு அவர் பேசினார்.