தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் நாகை திருமருகலைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றும், உரிய நீரை கர்நாடகம் திறக்காததால் தமிழகத்தில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்டன
கோஷங்களை முழங்கினர்.மேலும் காவிரி நீர் திறக்காததால், நட்ட பயிறும், தெளித்த பயிறும் கருகுதே கருகுதே என கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், கர்நாடக மற்றும் தமிழக அணைகளை காவிரி ஆணையம் கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
காவிரி நீர் திறக்காததால், தமிழகத்தில்19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும், 18, லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், நீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி நதிநீர் ஆணையம், பல்லில்லாத செயலற்ற ஆணையமாக உள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டினர்.
மேலும் கங்கை நீரை பாகிஸ்தானுக்கும், பங்களாதேசத்திற்கும் பிரித்து வழங்குவது போல், நாளை கூடும் ஆணைய கூட்டத்தில், தமிழக மக்களின் மக்களின் வாழ்வாதாரமான காவிரி நீரை, கர்நாடகா அரசிடமிருந்து மத்திய அரசு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழக விவசாயிகள், தவறும்