தஞ்சாவூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், அல்ஹாஜ் ஓஎஸ்ஜெ ஆபிதீன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் கவர்னிங் டிரஸ்டி காஜா முகையதீன் தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிப் பேசினார். இதில் தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவச் செயலர் முஹம்மது ரபீ, செயலர் ரபீக் தீன், ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான் உள்பட பலர் பங்கேற்றனர்.