தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன நாதர் ஆலய வளாகத்தில் கோ பூஜை நடந்தது. முற்பத்து முக்கோடி தேவர்கள் பசுவில் வசிப்பதாக ஐதிகம். லெட்சுமியின் சொரூபமான பசுவிற்கு கோ பூஜையை முன்னிட்டு பசுவின் முதுகில் புடவை சாத்தி, கழுத்தில் மாலையணிவித்து பூஜை, ஆராதனை நடந்தது. பசுவிற்கு பொங்கல், அரிசி வெல்லம், வாழைப் பழம், தீவனம் வழங்கப் பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, கவுன்சிலர் புஷ்பா, திமுக நிர்வாகி சக்தி வேல், ஆன்மீகப் பேரவை சீனிவாசன் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர்.