திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர்
ஆர்.நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், எபழ.குமரேசன், எம்.ஏ.ரகுமான், வாலிபர் சங்க நகரச் செயலாளர் தீபக், வழங்கறிஞர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.