ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி மிரட்டி ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது கண்டனத்துக்குரியது என குரல்கள் எழுந்துள்ளன.