மயிலாடுதுறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்பர் பிறந்த கிராமமான தேரழுந்தூர்.இங்கு 1930 ஆம் ஆண்டு கம்பர் கழகம் தொடங்கப்பட்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது.வருகிறது. பலமுறை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த தேரழுந்தூர் கம்பர் விழாசமீப ஆண்டுகளில் சுருக்கமாக நடந்து முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டகம்பன் கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது, கம்பர் பிறந்த ஊரில் அந்தக் கம்பர் கழகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில்புதுக்கோட்டை கம்பன் கழகம் ஒரு புது முயற்சி எடுத்து புதுக்கோட்டை கம்பன் கழக நிர்வாகிகள் தேரெழுந்தூருக்கு சென்று அங்கேயே நான்கு நாட்கள் தங்கி விழாவைச் சிறப்பாக நடத்தினர்.
தேரழுந்தூர்,புதுக்கோட்டை,புதுச்சேரி,திருச்சிராப்பள்ளி,சென்னை,கண்டாச்சிபுரம்,ராமேஸ்வரம்,கோவில்பட்டி,
குரோம்பேட்டை,உள்ளிட்ட பல கம்பன்கழக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் விழாவின் தொடக்கமாக கம்பர் பிறந்த இடமான கம்பர் மேட்டில் வழிபாடு நடத்திஅருள்மிகு ஆமருவியப்பர் திருக்கோயிலில் அமைந்துள்ள, மனைவியோடு நின்று அருள் பாலிக்கும் கம்பர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்திகோபூஜை செய்து அங்கிருந்து ஊர்வலமாகக் கம்பன் படைப்பான கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஒவ்வொருவர் தலையில் சுமந்து சீர்வரிசை தட்டுக்களோடு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கம்பர் கோட்டத்துக்கு வந்து விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த கம்பர் படத்திற்கு முன்னால் சீர்வரிசைத் தட்டுக்களை வைத்து திருவிளக்கு ஏற்றிக் கம்பனை வழிபட்டு விழாவினை நடத்தினர். இந்த தகவலை புதுகை கம்பன்கழக செயலாளர் சம்பத்குமார் தெரிவித்தார்.