தமிழ் மக்கள் அனைவரும் இன்று பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ் மக்களுக்கு தமிழிலேயே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடான கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.