திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அப்துல் சலாம், கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லாசா. இவரது மகள் ரேஷ்மா (15) இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை அப்துல்லா ஷா, பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.இவரது மகள் காஜல் (16) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜெய்சங்கர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரெங்கா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் புவனேஸ்வரி(20). இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் சீதாலட்சுமி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.